மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, 1996 ஆம் ஆண்டு 'கமோஷி: தி மியூசிகல்' (Khamoshi: The Musical) என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.
இந்தநிலையில், சஞ்சய் லீலா பன்சாலி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக 'ஹிராமண்டி' (Heeramandi) என்னும் இணையத் தொடரை இயக்கவுள்ளார். பெரும் பொருள் செலவில் இத்தொடர் எடுக்கப்படவுள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை பன்சாலி தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தொடர் குறித்து பன்சாலி கூறுகையில், 'ஹிராமண்டி' (Heeramandi) இது ஒரு காவியம். நிச்சயம் இது ரசிகர்களாகிய உங்களை ஆச்சரியப்படவைக்கும். புதிய அனுபவத்தை கொடுக்கும். லாகூரில் உயர் வகுப்பினருக்களுக்கு மட்டும் பணிபுரியும் பாலியல் தொழிலாளர்களை பற்றிய கதையாக இது இருக்கும்.
மறைமுகமான கலாச்சார யதார்த்தம், காதல், துரோகம், அரசியல் பற்றிய தொடராக இது உருவாகப்படவுள்ளது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொடராக இருப்பதால் இதை இயக்குவதில் எனக்கு பதட்டம் உள்ளது. எனினும் இதை சிறப்பாக செய்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வோம் என்றார்.
இதையும் படிங்க: அழகியலின் அரசன் பன்சாலி- #HBDSanjayLeelaBhansali