ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்குகள் தள்ளுபடி! - மும்பை உயர் நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்பு தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Sushant singh rajput  supreme court  PIL  Bombay High Court  சுஷாந்த் சிங் தற்கொலை  மும்பை உயர் நீதிமன்றம்  பொதுநல மனு

author img

By

Published : Aug 21, 2020, 6:32 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன் 14ஆம் தேதி மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவிலுள்ள குடியிருப்பு பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், “சுஷாந்த் சிங் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டது” தெரியவந்தது.

இந்நிலையில் சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில், சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பொதுநல மனுக்களையும் நீதிபதி இன்று (ஆக.21) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சுஷாந்த் வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.