ETV Bharat / sitara

'ஒரு ஓவியத்துக்கு யார் ஒரு லட்சம் கொடுப்பா... நம்ம அபிஷேக் பச்சன் தான்' - Farah thanks Abhishek for donating 1 lakh to daughter's charity drive

தனது மகளின் தொண்டு முயற்சிக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய, நடிகர் அபிஷேக் பச்சனுக்கு இயக்குநர் ஃபரா கான் நன்றி தெரிவித்துள்ளார்.

Farah
Farah
author img

By

Published : Apr 28, 2020, 1:22 PM IST

பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குநராகவும் வலம் வருபவர் ஃபரா கான். 12 வயது நிரம்பிய இவரது மகள் அன்யா, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஓவியம் வரைந்து நிதி திரட்டி வருகிறார்.

இவர் வரையும் ஓவியத்திற்குப் பிரபலங்கள் பலரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் அபிஷேக் பச்சன் அன்யாவுக்கு, தனது பங்காக ரூ. 1 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஃபரா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'யார் ஒரு ஓவியத்திற்கு ஒரு லட்சம் வழங்குவார்கள். அது அபிஷேக் பச்சன் மட்டுமே. இவரின் இந்தச் செயல் அன்யாவின் தொண்டு முயற்சிக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மிகப்பெரிய நன்றி' என்று அபிஷேக் பச்சனைக் கட்டிபிடித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றையும் ஃபரா கான் பதிவிட்டுள்ளார்.

மேலும் அன்யா நாய் ஓவியம் வரைந்து நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

அன்யா தான் வரையும் ஓவியம் மூலம் திரட்டும் பணத்தை ஊரடங்கு காலத்தில் உணவு வழங்குதல், அத்தியாவசியப் பெருட்கள் தேவைப்படுவோருக்கு பொருட்கள் வழங்குதல், விலங்குகளுக்கு உணவு அளித்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்.

முன்னதாக அன்யாவின் இந்த முயற்சிக்கு நடிகை தபு, சோயா அக்தர் ஆகியோர் உதவி செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.