'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான்-பிரபு தேவா இணைந்துள்ள படம் 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்'. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை சல்மான் கான் தயாரிக்கிறார்.
மேலும் ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2009ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டுவரும் இந்தப் படம் 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரம்ஜான் வெளியீடாக வர இருந்தது. அப்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இதன் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி மே 13ஆம் தேதி வெளியாகும் என சல்மான் கான் தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரமலான் அன்று வெளியாகிறது சல்மான் கானின் ‘ராதே’