மும்பை: இந்திய விவாசாயிகள் போராட்டம் குறித்து பேச வேண்டும் என்ற தனது ட்வீட் மூலம் வலியுறுத்திய ஹாலிவுட் பாடகி ரிஹானாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஞ் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரிரி என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் 2.16 நிமிடங்கள் உள்ளன. இந்த பாடலை தோசன்ஞ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடல் வரிகளை ராஜ் ரன்ஜோத் எழுத, பிரபல இசையமைப்பாளர் இன்டென்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலை தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ள பாடகர் தில்ஜித் அதன் வரிகளுக்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார். அதில், "பூமிக்கு இந்த தேவதையை அனுப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. அவருக்கு பாட்டியாலா ஆடையும், கனமான ஜோடி கொலுசையும் பரிசாக அளிக்க வேண்டும். பஞ்சாபியர்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்களது ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டு பொறாமை அடைகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Barbados Diye Sohniye Kudiye ...
— DILJIT DOSANJH (@diljitdosanjh) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rang Jion Kankaan Di Jaee Ein..
Raj tan Rab Nu Kare Salaama
Jiney Pari Dhart Te Laee Ein.. ❤️#RIRI #Rihanna https://t.co/SkyOBC8lLx
Tere Concert ch Avan Pa Ke Kurta Pajama.. Oh RIHANNA ❤️❤️ @Thisizintense @raj_ranjodh
">Barbados Diye Sohniye Kudiye ...
— DILJIT DOSANJH (@diljitdosanjh) February 3, 2021
Rang Jion Kankaan Di Jaee Ein..
Raj tan Rab Nu Kare Salaama
Jiney Pari Dhart Te Laee Ein.. ❤️#RIRI #Rihanna https://t.co/SkyOBC8lLx
Tere Concert ch Avan Pa Ke Kurta Pajama.. Oh RIHANNA ❤️❤️ @Thisizintense @raj_ranjodhBarbados Diye Sohniye Kudiye ...
— DILJIT DOSANJH (@diljitdosanjh) February 3, 2021
Rang Jion Kankaan Di Jaee Ein..
Raj tan Rab Nu Kare Salaama
Jiney Pari Dhart Te Laee Ein.. ❤️#RIRI #Rihanna https://t.co/SkyOBC8lLx
Tere Concert ch Avan Pa Ke Kurta Pajama.. Oh RIHANNA ❤️❤️ @Thisizintense @raj_ranjodh
முன்னதாக, இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்து, இதைப் பற்றி நாம் ஏன் பேசாமல் உள்ளோம்? #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
இவரது இந்தப்பதிவுக்குப் பின்னர், பிரபல காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், நடிகை மியா கலிஃபா ஆகியோரும் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பாடகர் தோசன்ஞ் பங்கேற்றார். அப்போது, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் எனவும், அரசாங்கம் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பான் இந்தியா வெப்சீரிஸ் - பாலிவுட் ஹீரோவை மிஞ்சிய விஜய் சேதுபதியின் சம்பளம்?