'தாம் தூம்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் பாலிவுட்டலில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் நல்ல வேடம் ஏற்று நடித்து வருகிறார். இவர் நடித்த குயின், மனிகர்ணிகா ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன. ஆனால், நாளொரு வண்ணம் தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் உண்டு.
அண்மையில் இவர் நடித்துள்ள 'ஜட்ஜ்மெண்டல் ஹை கியா' படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவரிடம் மூர்க்கத்தணமாக நடந்துகொண்டார். இது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது ஓய்வதற்குள் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் செய்தி அதிரடியாக வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ராஜ்நீஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் 'தாகத்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் கங்கனா ரணாவத் ரத்தம் வடிந்த ஆக்ரோசமான முகத்துடன், கைகளில் துப்பாக்கி ஏந்தி சண்டையிடும் ராணுவ வீராங்கனையாக தோன்றுகிறார். இதுவரை இந்திய சினிமாவில் பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் மிகவும் வித்தியாசப்படுத்தி புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. கர்ஜிக்கும் முகம், பெண் சிங்கம் போன்ற தோரணையில் கங்கனா ரணாவத் நிற்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இப்படம் 2020 தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆண்களுக்கு இணையான வேடங்கள் ஏற்று நடிக்கும் கங்கனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA
— taran adarsh (@taran_adarsh) July 9, 2019
இந்நிலையில், கங்கனா ரணாவத் கொடுத்த இந்த திடீர் ஷாக்கிங்கில் ரசிகர்கள் திகைத்து போயுள்ளனர். 'தாகத்' பட போஸ்டர் பாலிவுட் சினிமாவை திணற வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.