கரோனா பரவல் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்குப் பங்களிக்கும் வகையில் அக்ஷய் குமார், அவரது மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கண்ணா ஆகியோர் இணைந்து 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இவர்களுடன் டைவிக் அறக்கட்டளை 120 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்க மொத்தம் 220 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நடிகை ட்விங்கிள் கண்ணா டெல்லி, பஞ்சாபில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் லாட்ஸ் (lots) அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.