ETV Bharat / sitara

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: வேதாவாக க்ருத்திக் ரோஷன்

author img

By

Published : Jul 10, 2021, 2:37 PM IST

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் க்ருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திலும் சைஃப் அலிகான் மாதவன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.

Vikram Vedha
Vikram Vedha

நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. சசிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து ’விக்ரம் வேதா’ படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்த் பெற்றார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரியே இப்படத்தையும் இயக்கவுள்ளனர். நீண்ட நாள்களாக இப்படத்தின் கேங்ஸ்டர் - போலீஸ் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்தான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், விஜய் சேதுபதியாக க்ருத்திக் ரோஷனும், மாதவனாக சைஃப் அலி கானும் நடிக்கின்றனர். கரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. மேலும் இப்படம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆமிர் கான் இடத்தைக் கைப்பற்றிய ஹிரித்திக் ரோஷன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.