திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி என்ற பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள சப்பாக் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் அரசுகள் இப்படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளன.
இது குறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் திரைப்படம் திராவக வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்டோரை ஊக்குவிக்கும்விதத்திலும், அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்வகையிலும் உள்ளது. திராவக வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டோரின் துணிவு, போராட்டம், வாழ்வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்று, சமூகத்திற்கு பங்காற்ற முனையும் அவர்களது மனோதிடம், குறிக்கோள்களைப் பற்றி பேசுகிறது" எனப் பாராட்டியுள்ளார்.
-
दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
— Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
1/2
">दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
— Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020
छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
1/2दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
— Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020
छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
1/2
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் கொடூர வன்முறையான திராவக வீச்சு தாக்குதலைப் பற்றி பேசி இத்திரைப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்றார். இத்திரைப்படத்தை மக்கள் குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷிற்கு நேரில் சென்று தீபிகா ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, கலவையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுவந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தீபிகாவிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
-
समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें।
">समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020
आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें।समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020
आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें।
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும் தீபிகாவின் இந்நடவடிக்கைக்கு வாழ்த்துத் தெரிவித்த நிலையில், தீபிகா என்றைக்கும் வலிமையானவர் என்றும் வன்முறைக்கு எதிராக வெகுண்டெழும் அனைவரும் இத்திரைப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க: கடும் விமர்சனங்களைப் பெற்ற பாஃப்டா பரிந்துரைப் பட்டியல்!