ETV Bharat / sitara

சாரா அலி கானின் முத்தக்காட்சியை குறைத்த சென்சார்! - love aaj kal

பாலிவுட் திரைப்படமான 'லவ் ஆஜ் கல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான் இடையேயான முத்தக்காட்சியின் நீளத்தை சென்சார் போர்டு குறைத்துள்ளது.

sara ali khan, love aaj kal, சாரா அலி கான்

author img

By

Published : Feb 12, 2020, 9:32 PM IST

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவரது மகளான சாரா அலி கான் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். இந்நிலையில் சாரா அலி கான், கார்த்திக் ஆர்யனுடன் நடித்துள்ள 'லவ் ஆஜ் கல்' என்ற பாலிவுட் படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது.

sara ali khan, love aaj kal, சாரா அலி கான்
சாரா அலி கான்

இத்திரைப்படத்தில் சாரா அலி கான், ஸோ என்னும் தைரியமிக்க பெண்ணாக நடித்துள்ளார். அதில் அவர், தனது காதலுக்காக ஏங்கும் பெண்ணாகவும் இருப்பினும் அவர் எவ்வாறு தனது வாழ்க்கையையும் வேலையையும் சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பது போன்ற ஒரு சவால் மிக்க வேடத்தில் நடித்துள்ளார்.

இம்தியாஸ் அலி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரந்தீப் ஹுடா, ஆருஷி சர்மா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல ஆபாசமான காட்சிகளை சென்சார் நீக்கியுள்ளது. அதில், படத்தின் தொடக்கத்தில் கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான் இடையேயான முத்தக்காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவரும் ஆடைகளை களையும் காட்சியும் மாற்றப்பட்டுள்ளது.

படத்தில் சாரா அலி கான், கார்த்திக் இடையேயான நெருக்கமான காட்சிகளும், ஆபாச காட்சிகளும் தெளிவில்லாமல் இருக்கும்படியாக சென்சார் போர்டு மாற்றம் செய்துள்ளது. இது தவிர படத்தில் பல காட்சிகளில் தகாத வார்த்தைகள் பேசப்படும் இடங்களில் சத்தம் நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆட்சியா பண்றாங்க... அராஜகம் பண்றாங்க...' - 'தட்றோம் தூக்குறோம்' ட்ரெய்லர் சொல்லும் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.