ETV Bharat / sitara

அழகின் அளவுகோலாக நிறம் இல்லை - அதிதி ராவ் ஹைதாரி - ஃபேரன் லவ்லி க்ரீம்

மும்பை: அழகின் அளவுகோலாக நிறம் ஒருபோதும் இருக்காது என அதிதி ராவ் ஹைதாரி கூறியுள்ளார்.

அதிதி ராவ்
அதிதி ராவ்
author img

By

Published : Jul 9, 2020, 2:32 PM IST

இந்தியாவில் அழகு சாதனப் பொருள்களில் மிகவும் புகழ்பெற்றவை யுனிலிவர் நிறுவனத்தின் 'ஃபேர் அண்ட் லவ்லி' தயாரிப்புகள். இருப்பினும், வெள்ளை நிற சருமத்தை உடையவர்கள் மட்டுமே அழகானவர்கள் என்ற எண்ணத்தை, இந்த அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களிடையே பரப்புவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

சமீபத்தில் உலகமெங்கும் அதிர்வலையை உண்டாக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்டு இறப்புக்கும் நிறவெறிக்கும் எதிராக எழுந்தப் போராட்டங்களை முன்னிட்டு யுனிலிவர், தயாரிக்கும் பொருள்களில் இருக்கும் 'ஃபேர்' என்னும் சொல்லை நீக்குவதாகத் தெரிவித்தது. இதற்குப் பல பாலிவுட் பிரபலங்கள் தங்களது வரவேற்பைப் பதிவு செய்திருந்தனர்.

அந்தவகையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி நிறம் குறித்தான தனது கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'சில காலம் முன்பு வரை அழகின் அளவுகோலாக நிறம் இருந்தது. அழகின் அளவுகோலாக நிறம் ஒருபோதும் இருக்காது என நான் நம்புகிறேன். சமீபத்தில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தனது பிராண்டில் இருந்து 'ஃபேர்' என்னும் சொல்லை நீக்கி இருந்தனர். இது வரவேற்கத்தக்கது.

எங்கள் தலைமுறையினர் எப்போதும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு உலகத்தில் நிற்கவே விரும்புகின்றனர். நான் சினிமாவில் நுழைந்தபோது எனக்கு அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்திருந்தது.

நான் திரைப்படத்துறை பின்புலம் இல்லாமல், சுயமாக சினிமா துறையில் நான் வந்திருந்ததால், அந்த விளம்பரத்தில் நடிப்பதை நிராகரித்து விட்டேன். அதற்குக் காரணம் அழகு குறித்த எனது தெளிவே.

சாதி, மதம், நிறம் உள்ளிட்டவைகளை கடந்து மனிதர்களுடன் பழக, என் குடும்பம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் நான், அழகு பற்றிய பாரபட்சமான கருத்தை என்னால் ஆதரிக்க முடியாது. ஃபேர் என்னும் வார்த்தையை நீக்கி இருப்பது ஒப்பனை உலகை இன்னும் அழகாக்கி இருக்கிறது.

பல ஆண்டுகளாக மக்கள் மனதில் கடைப்பிடித்து வரும் அழகின் அளவுகோல் ஆன நிறத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினமான செயல். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நிச்சயம் ஒருநாள் இந்த நிலை மாறும்.

இன்றைய சமூகத்தில் நாம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். அதிலும், குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான பல அடிப்படை பிரச்சனைகள் இருந்து வருகிறது. எனவே, அழகு என்பது நமது உள்ளத்தில் இருக்கும் ஒன்று' எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.