ETV Bharat / sitara

போதை பொருள் விவகாரத்தில் மொத்த பாலிவுட்டையும் குற்றம்சாட்ட வேண்டாம் - அக்‌ஷய் குமார் - போதை பொருள் விநியோகம்

மும்பை: போதை பொருள் பாலிவுட்டில் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் அனைவருக்கும் தொடர்பு இருக்கும் என குற்றம்சாட்ட வேண்டாம் என நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

kas
aks
author img

By

Published : Oct 4, 2020, 3:36 PM IST

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தியிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் பயன்பாடு தொலைபேசி உரையாடல் முலம் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, களத்திலிறங்கிய அமலாக்கப் துறையினர் பாலிவுட் துறையில் போதை பொருள் விநியோகம் நடப்பதாக சந்தேகித்து விசாரணையை தொடங்கினர்.

பல பிரபலங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையால் பாலிவுட் துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பல அரசியல் கட்சியினரும் இதுதொடர்பாக பேசி வருகின்றனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க சமீபத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு அமலாக்க துறையினர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " இன்று நான் உங்களிடம் கனத்த இதயத்துடன் பேசுகிறேன். சுஷாந்த் மரணத்துக்கு பிறகு ஏராளமான பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவை உங்களைப் போலவே எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது. இன்று போதைப் பொருள் என்பதுதான் அதிகம் விவாதிக்கப்படும் செய்தி. பாலிவுட்டில் இந்த பிரச்னை இல்லை என்று நான் நெஞ்சில் கைவைத்து உங்களிடம் நான் பொய் சொல்லப்போவதில்லை. மற்ற துறைகளை போலவே இங்கும் அது உள்ளது. ஆனால் இங்குள்ள ஒவ்வொருவரும் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அதற்கு அர்த்தம் அல்ல. அது சாத்தியமே இல்லை.

போதைப் பொருள் என்பது சட்டரீதியான விவகாரம். நீதிமன்றமும், சட்டமும் நடத்தும் விசாரணையும், எடுக்கும் நடவடிக்கைகளும் சரியாக இருக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

ஆனால் ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் இதில் சம்பந்தப்படுத்தி குற்றம்சாட்ட வேண்டாம் என்று உங்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இது சரியல்ல.

ஊடக சக்தியை எப்போதும் நம்புபவன் நான். அவர்கள் சரியான நேரத்தில் சரியான பிரச்னைய பேசவில்லை என்றால் நம் நாட்டில் பல மக்களுக்கு நீதி கிடைக்காது. ஆனால் ஒரு எதிர்மறை செய்தி ஒருவரது பல வருட உழைப்பையும், நற்பெயரையும் நாசமாக்கிவிடக்கூடாது என்பதையும் கவனத்தையும் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.