ETV Bharat / sitara

கரோனாவில் இருந்து மீண்ட பிரபல பாலிவுட் நடிகர்

author img

By

Published : Oct 7, 2020, 12:59 PM IST

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தான் கரோனாவிலிருந்து மீண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்

கீ கா, 2 ஸ்டேட்ஸ் ஆகிய பாலிவுட் வெற்றிப் படங்களில் நடித்தவர் அர்ஜுன் கபூர். இவர் கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தார். தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 'நான் கரோனா தொற்றியிருந்தது குணமடைந்துவிட்டேன் என்ற செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது முழுவதுமாக குணம் அடைந்துவிட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு பணிக்கு திரும்ப ஆவலுடன் உள்ளேன். நான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.

சிறியவர்கள் முதியவர்கள் என வயது பாகுபாடின்றி கரோனா வைரஸ் அனைவரையும் தாக்கும் என்பதால் மக்கள் இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், முகக்கவசம் அணிய வேண்டும். மக்களைப் பாதுகாக்க தங்களது உயிரையும் பொருட்படுத்தாது ஓயாது உழைத்து வரும் முன் களப் பணியாளர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் கடமைப்பட்டு இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.