அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஓட்டப்பந்தய வீரராக ஆயுஷ்மான குரானா நடிக்கவுள்ளார். இதற்காக எடையை குறைக்க தனது பயிற்சியாளர் ராகேஷ் உதியாரை சண்டிகரில் இருந்து வரவைத்திருக்கிறார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், ஆயுஷ்மான் தனது புதிய படத்துக்காக பயிற்சி மேற்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். எனவே பயிற்சிக்காக தனது பயிற்சியாளர் ராகேஷ் உதியாரை சண்டிகரில் இருந்து டிக்கெட் போட்டு வரவைத்துள்ளார். ராகேஷுக்கு ஆயுஷ்மான் பற்றி நன்றாக தெரியும். அவருடன் ஒரு ஆண்டுக்கு மேல் உடன் இருந்திருக்கிறார். எனவே புதிய படத்துக்கான தோற்றத்துக்கு ஏற்றார்போல் ஆயுஷ்மானை அவர் மெருகேற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் பற்றி ராகேஷை அழைத்து கேட்டபோது, ஆம், நான் சண்டிகரில்தான் இருக்கிறேன். ஆயுஷ்மானுக்கான பயிற்சி தொடங்கிவிட்டது. மற்றப்படி படத்தைப் பற்றி எதுவும் கூற இயலாது என தெரிவித்தார்.