ETV Bharat / sitara

என் படத்தில் ஏன் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைக்கவில்லை - ரகசியத்தை உடைத்த ஏ.ஆர்.ரஹ்மான் - ஏ.ஆர்.ரஹ்மான் 99 சாங்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் 99 சாங்ஸ் படத்தில் ஏன் பாகிஸ்தான் நாட்டு நடிகரை நடிக்க வைக்கவில்லை என்பது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

என் படத்தில் ஏன் பாக்கிஸ்தான் நடிகரை நடிக்கவைக்கவில்லை -ரகசியத்தை உடைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

author img

By

Published : Feb 21, 2020, 8:21 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது '99 சாங்ஸ்' என்ற படத்தை தயாரித்துவருகிறார். அவரே கதை எழுதி, தயாரிக்கும் இப்படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க முதலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த புதுமுகம் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக காஷ்மீரை சேந்த இஹான் பட் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் சமீபத்தில் பேசுகையில், 'இப்படத்தில் நடிக்கும் நடிகர் வெறும் நடிப்பவராக மட்டுமில்லாமல் பாடகராகவும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இஹான் பட்டிடம் (Ehan Bha ) அதற்கான திறமை இருப்பதால்தான் அவரை தேர்வு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

அவரைத்தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ’இப்படத்தின் ஹீரோ தான் விரும்பும் காதலிக்காக 99 பாடல்கள் பாடி அவரைக் இம்ப்ரெஸ் செய்கிறார். முதலில் இப்படத்திற்கு ’100 சாங்ஸ்' என்று தலைப்பு வெய்க்கப்பட்டது. ஆனால் 100 சாங்ஸ் என்பது கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தெரிந்தது. பிறகுதான் ’99 சாங்ஸ்' என்று பெயர் மாற்றப்பட்டது. இப்பாடம் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

URI Strike பிறகு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'Ae Dil Hai Mushkil' திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருந்தார். அதனால் படம் வெளியாக தாமதாமானது. என் படத்திலும் அது போன்ற சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை, அதனால்தான் பாகிஸ்தான் நடிகருக்கு பதிலாக காஷ்மீர் நடிகரை தேர்வு செய்தேன்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'இந்தியன் 2' பட விபத்து: தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.