ஹைதராபாத் : நடிகை அனுஷ்கா சர்மா, 3 வருட காத்திருப்புக்கு பின்னர் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் முன்பு தோன்றவுள்ளார். இந்தப் படம் ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸ்-இல் வெளியாகிறது.
சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சக்தா எக்ஸ்பிரஸ் படம் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா கூறுகையில், “இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம். ஏனெனில் இது ஒரு தியாகத்தின் கதை. இந்த சக்தா எக்ஸ்பிரஸ் கிரிக்கெட் பெண்கள் குறித்து பேசும்.
![Anushka Sharma to play cricketer Jhulan Goswami in new film](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/anushka-sharmas-first-look-from-chakda-xpress-out-now_0601a_1641460840_501.jpg)
கடந்த காலங்களில் உலக அரங்கில் தனது நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்த நேரத்தில், அவர்களால் விளையாட்டை நினைத்துப் பார்ப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜூலன் கோஸ்வாமியின் கிரிக்கெட் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜூலன் கோஸ்வாமி ஆக நடிகை அனுஷ்கா சர்மா தோன்றுகிறார். இந்தக் கதாபாத்திரம் தனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது என்று கூறியிருந்தார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா, கடைசியாக 2018ஆம் ஆண்டு 'ஜீரோ' படத்தில் நடித்தார். அதன்பின்னர் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் குழந்தை பெற்றெடுத்த பின்னர் முதல் முறையான ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக அரிதாரம் பூசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அனுஷ்காவின் 48ஆவது படம் என்ன தெரியுமா?