ETV Bharat / sitara

வீட்டில் வெறுமை, இன்ஸ்டாகிராமில் விளையாடும் அனுஷ்கா ஷர்மா - கெஸ் த ஜிப்ரிஷ் அனுஷ்கா ஷர்மா

ஊரடங்கு காலத்தில் தங்கள் பொழுதைக் கழிக்க பல்வேறு பிரபலங்களும் புதுப்புது விஷயங்களை கையில் எடுத்து, வந்து பிரபலப்படுத்தும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமின் 'கெஸ் த ஜிப்ரிஷ்' (Guess The Gibberish) சேலஞ்சை ஏற்று தோற்றுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா
author img

By

Published : Apr 23, 2020, 8:05 PM IST

இன்ஸ்டாகிராமில் அர்த்தமற்ற தவறான வார்த்தைகளைத் திரையில் காண்பித்து, அவை உணர்த்தும் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கக் கோரும் கெஸ் த ஜிப்ரிஷ் (Gibberish - மழலையர் பேசும் அர்த்தமற்ற மொழியைக் குறிக்கும் சொல்) ஃபில்டர் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விளையாட்டில் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க ஒரு பயனாளருக்கு 10 விநாடிகள் வரை நேரம் வழங்கப்படுகிறது.

கு க்றிஸ்டோஃபர் எனும் இன்ஸ்டாகிராம் பயனாளர் உருவாக்கியிருக்கும், இந்த ஃபில்டர், ஊரடங்கு காரணமாக பெரும்பான்மையானோரால் உபயோகிக்கப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

கெஸ் த ஜிப்ரிஷ் விளையாடிய அனுஷ்கா ஷர்மா

பல பிரபலங்களும் இதை ஆர்வமாக விளையாடி வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும்; இதில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இதில் பிரபல தொலைக்காட்சித் தொடரான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' அர்த்தமற்ற ஜிப்ரிஷ் மொழியில் வழங்கப்பட்டிருந்த நிலையில், 'ஸ்ட்ரேஞ் திங்க்ஸ்' என அதைப் படித்து நூலிழையில் தோற்றுள்ளார் அனுஷ்கா ஷர்மா. அனுஷ்காவின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: அப்போ பில்லோ... இப்போ நியூஸ் பேப்பர்... ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பாயல் ராஜ்புட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.