திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், சமீபகாலமாக சமூக வலைதளமான ட்விட்டரில் வார்த்தைப் போரில் சிக்கியுள்ளார். கங்கனா ரணாவத், ரன்வீர் ஷோரி என அடுத்தடுத்த பிரபலங்கள் அனுராக்கை வசைபாடி வருகின்றனர். இதற்கிடையில் நெட்டிசன் ஒருவர் உங்களால் ஒரு மனைவியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நீங்கள் ஒரு அறிவாளியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனுராக், பெண்களை நாம் கட்டுப்படுத்த தேவையில்லை. அவர்களால் உங்களையும் உங்களது முழு குடும்பத்தையும் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. இந்தத் திறன் எங்களுக்கிடையே செயல்படுத்த முடியாத போது நாங்கள் பிரிந்து விட்டோம். பெண் என்பவள் கட்டிப் போட்டிருக்கும் அடிமைபோல் அல்ல. உங்களுடைய விஷயத்தில் எப்படி என திருப்பித் தாக்கினார். இவரின் இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப், ஆர்த்தி பஜாஜ், கல்கி கோச்லி எனும் இரு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரிடமும் இருந்து விவாகரத்து பெற்றார்.