சுஷாந்த் சிங் இறுதிச் சடங்குக்கு செல்லாதது குறித்தும், அவர் இறந்த நிலையிலிருந்த புகைப்படங்கள் தன்னை எவ்வளவு பாதித்தது என்றும் சுஷாந்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான அங்கிதா மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு செய்தியாளர் என்னை தொலைபேசியில் அழைத்து, அங்கிதா, சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அத்துடன் எனக்கு எல்லாம் முடிந்தது போன்று இருந்தது. அதன் பிறகு அவரது இறுதிச் சடங்குக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்தேன். ஏனென்றால் அவரை சடலமாக பார்த்தால் என்னால் அதை மறக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் இறந்த நிலையிலுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். தனக்கு மட்டுமல்லாமல் சுஷாந்தின் குடும்பத்தினருக்கும், அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் கூட அந்தப் புகைப்படம் வருத்தத்தை தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இறுதிச் சடங்கு நடைபெற்ற பின்னர் அங்கிதா, சுஷாந்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... விவசாயம் செய்ய சுஷாந்த் விருப்பினார் - முன்னாள் காதலி உருக்கம்
!