ETV Bharat / sitara

மருத்துவர்களின் மேன்மையை உணர்த்தும் வாசகங்கள் - பாராட்டிய அமிதாப் - பாலிவுட் செய்திகள்

மருத்துவர்களின் மேன்மையை உணர்த்தும் வகையில் சாலை அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப் பச்சன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Breaking News
author img

By

Published : Apr 24, 2020, 1:06 PM IST

குஜராத் மாநிலம் சூரத்தின் சாலை அறிவிப்புப் பலகை ஒன்றில், ”கோயில்கள் ஏன் பூட்டப்பட்டுவிட்டன என்று உங்களுக்குத் தெரியுமா? தெய்வங்கள் அனைத்தும் வெள்ளை உடையில் மருத்துவமனைகளில் நடமாடுவதால்தான்” என மருத்துவர்களைப் பாராட்டி ஊக்கமளிக்கும் பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டுவந்த நிலையில், மருத்துவர்களின் மேன்மையை உணர்த்தும் இந்த வாசகங்களை பாலிவுட்டின் ’பிக் பி’ அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமிதாப் பச்சன்

சூரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகை வாசகங்களை பாராட்டியுள்ள அவர், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாடு முழுவதும் இரவு பகல் பாராது பணிபுரியும் மருத்துவர்களை ஆசிர்வதிக்கும்படி வேண்டி ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் வெறுமை, இன்ஸ்டாகிராமில் விளையாடும் அனுஷ்கா ஷர்மா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.