ETV Bharat / sitara

'அன்ஃபினிஷ்டு' ஒரு அற்புதமான உணர்வு - உருகிய ப்ரியங்கா சோப்ரா! - பிரியங்கா சோப்ராவின் சுயசரிதை

மும்பை: தனது சுயசரிதை புத்தகமான 'அன்ஃபினிஷ்டு' அச்சடிக்கப்பட்டுவிட்டதாக நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
author img

By

Published : Aug 18, 2020, 3:03 PM IST

இந்திய அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ப்ரியங்கா சோப்ரா, அதே ஆண்டில் உலக அழகிப் பட்டமும் வென்றார். இவர் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் பாலிவுட், ஹாலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கரோனா தொற்று நெருக்கடி காரணமாக, வீட்டிலிருந்து வரும் ப்ரியங்கா, தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 'அன்ஃபினிஷ்டு' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து ப்ரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'அன்ஃபினிஷ்டு' முடிந்து விட்டது. இறுதி வடிவம் பதிப்பகத்திற்கு அனுப்பத் தயாராக உள்ளது. அதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். என் சுயசரிதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் உள்ள சுயபரிசோதனை, பிரதிபலிப்பு ஆகியவற்றிலிருந்து பிறந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.தற்போது இதன் அச்சுப் பதிப்பு முடிந்துவிட்டதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ப்ரியங்கா கூறியிருப்பதாவது, ' 'அன்ஃபினிஷ்டு' முதல் முறையாக காகிதத்தில் அச்சிடப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு ஒரு அற்புதமான உணர்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும்' எனக் கூறியுள்ளார்.'அன்ஃபினிஷ்டு' புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகம் வெளியிடுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.