ETV Bharat / sitara

'அண்ணனைத் தொடர்ந்து தம்பி...' - சிங்கத்தைத் தொடர்ந்து 'கைதி' ரீமேக்கில் அஜய் தேவ்கன்

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த 'கைதி' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வெளியாகும் தேதி குறித்து அதன் படக்குழு அறிவித்துள்ளது.

Ajay Devgn
Ajay Devgn
author img

By

Published : Feb 28, 2020, 11:12 AM IST

பாலிவுட்டில் ஷாருக் கான், சல்மான் கான் என முக்கிய நடிகர்கள் பேரோடும் புகழோடும் உலா வர அங்கு தனக்கென்றும் தன் நடிப்புக்கென்றும் ஒரு இருப்பைத் தக்க வைத்துக்கொண்டவர் அஜய் தேவ்கன். 'பூல் ஆவுர் கான்தே' என்னும் திரைப்படம் மூலம் 1991ஆம் ஆண்டு பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்த அவரின் திரைப்பயணம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

கால்பந்து பயிற்சியாளர் சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் 'மைதான்' படத்தில் தற்போது அஜய்தேவ்கன் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் தீபாவளி ரேஸில் 'பிகில்' படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் 'கைதி'. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து 'டில்லி' கார்த்தி கைதட்டல் வாங்கினார்.

'மாநகரம்' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி' டில்லியை பிடித்துப்போய் விட்டது.

தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் கூறுகையில், 'தமிழ்த்திரைப்படமான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடிக்கிறேன். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்டும் டிரீம் வாரியர்ஸூம் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படத்தில் தற்போது அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். படத்தின் இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

அஜய்தேவ்கன், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க: 'மைதான்' அஜய் தேவ்கானின் புதிய போஸ்டர்கள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.