ETV Bharat / sitara

மனைவி பேச்சை கேட்பாரா ஷாருக்கான்? - ஷாருக்கான் மனைவி கெளரிகான்

'தில்வாலே துல்கனியா லே ஜாயிங்கே' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டும் என்று அவரது மனைவி கெளரி கூறியுள்ளார்.

Gauri wants SRK to make DDLJ 2
Shah rukh with his wife Gauri khan
author img

By

Published : Feb 29, 2020, 3:36 AM IST

இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய சினிமாக்கள் பற்றி பேசுகையில், அமிதாப்பச்சன் நடித்த 'ஷோலே' மற்றும் ஷாருக்கான்-கஜோல் நடித்த 'தில்வாலே துல்கனியா லே ஜாயிங்கே' ஆகிய படங்களைக் குறிப்பிட்டு பேசினார்.

இது குறித்து ஷாருக்கானின் மனைவி கௌரி கூறுகையில், “தில்வாலே துல்கனியா லே ஜாயிங்கே' படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கான் எடுக்க வேண்டும். அநேகமாக அவரது அடுத்த திட்டம் அதுவாகத்தான் இருக்கும்.

இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிடம் பேசவுள்ளேன். அவருக்கு என்னை பிடித்ததை விட நான் செய்த கட்டிட வடிவமைப்பு வேலையை மிகவும் நேசித்தார். புதிது புதிதான வடிவமைப்புகள் மீது மிகுந்து ஆர்வம் கொண்ட அவர் நடிகராகவிட்டால், கட்டாயமாக கட்டிட வடிவமைப்பாளராகியிருப்பார்.

ஷாருக்குக்கு நவீன மற்றும் சமகால வடிவமைப்புகள் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ஒரு டேபிள் வடிவமைத்திருந்தேன். அதைப் பார்த்து அவர் எனக்கு முழு மதிப்பெண் அளித்தார். அத்துடன் எங்களது வீட்டில் அவரது அறையை நான் வடிவமைத்துக் கொடுத்தேன். அது மிகவும் அவரைக் கவர்ந்தது எனக்கு மிகவும் உற்சாகம் அளத்துள்ளது” என்றார்.

2018இல் வெளியான 'ஸீரோ' படத்தில் குள்ளமான தோற்றத்தில் நடித்திருந்தார் ஷாருக்கான். இதன் பின்னர் அவரது படங்கள் கடந்த ஆண்டு எதுவும் வெளிவரவில்லை.

தற்போது நான்கு படங்களில் ஷாருக்கான் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் படங்களுக்கான அப்டேட்டை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.