இந்தியாவின் ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இத்தொடரின் முதல் சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல் சீசனை நவம்பர் மாதம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுவதால் எல்பிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக நவம்பர் 21ஆம் தேதி எல்பிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஏழு அணிகளுடன் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் அணிகளில் ஒன்றான 'கண்டி டஸ்கர்ஸ்' அணியின் உரிமையை சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான் வாங்கியுள்ளார். இந்த அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் விளையாட உள்ளார்.
இந்த அணியின் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கேப்டன் ஹஷன் திலகரத்னே உள்ளார்.
இதுகுறித்துசோஹைல் கான் கூறுகையில், "லங்கா பிரீமியர் லீக்கில் நிறைய சாத்தியங்கள் உள்ளன. இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை ரசிகர்கள் இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.
இந்த அணிக்காக கிறிஸ் கெய்ல் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமல்லாது இந்த அணியில் இளைஞர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர். இந்த அணி இறுதிப்போட்டியில் விளையாடவும் நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியானது டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
லங்கா பிரீமியர் லீக் தொடர்: 'கண்டி டஸ்கர்ஸ்' அணியின் உரிமைத்தை வாங்கிய சல்மான் கானின் சகோதரர் - கிறிஸ் கெயில்
கொழும்பு: லங்கா பிரீமியர் லீக் தொடரின் 'கண்டி டஸ்கர்ஸ்' அணியின் உரிமைத்தை சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான் வாங்கியுள்ளார்.