கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட திரையரங்குகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதையொட்டி இத்தனை மாதங்களாக வெளிவராமல் இருந்த திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. அந்தவரிசையில் முதலாவதாக இந்தியில் இஷான் காட்டர் நடிப்பில் வெளியாகியுள்ள காலி பீலி (Khaali Peeli) திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அக்டோபர் 2ஆம் தேதி, ஜீ பிளக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், மீண்டும் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸுக்கு உத்தரவிட்ட கோர்ட்!