ETV Bharat / sitara

'சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சர்ஜா எனது அன்பிற்குரிய நண்பர்கள்'- நடிகர் சிம்பு - சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த சிம்பு

நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன் ஆகியோரின் எதிர்பாராத இறப்பு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

actor simbu condolence to sushant singh rajput death

author img

By

Published : Jun 18, 2020, 7:54 AM IST

கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்தே திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல திரைபிரபலங்கள் எதிர்பாராத விதமாக பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். குறிப்பாக நடிகர் சேதுராமன், சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்றோர் மிகச் சிறிய வயதில் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், 'மிகுந்த துயரமான நாள்களாக இந்த சில நாள்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள்.

இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. இதனை சினிமாவிற்கான இழப்பாக பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்.

இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதை நான் அறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக்கொண்டே இருக்கும்.

actor simbu condolence to sushant singh rajput death
சுஷாந்த் சிங் ராஜ்புட்

கரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கரோனாவின் பாதிப்பில் மரணம் ஏற்பட்ட குடும்பங்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 'தில் பேச்சுரா' இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் இதுவே.

இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். பயப்படுவதுதான் (Panic) மிகப்பெரிய நோய். இதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, கஜா புயல் என எத்தனையோ இயற்கைச் சீற்றங்களை நாம் எதிர்கொண்டு வெற்றிகண்டோம்.

நிறைய பேரின் வீடுகள், ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்தக் கரோனா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப்போட்டுள்ளது.

நீங்கள் நேரடியாக உதவி செய்யமுடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள். கையுறை (கிளவுஸ்), முகக்கவசம் அணிந்து, கரோனா இல்லாத நிலையை உருவாக்குவோம்.

மனதளவில் தளர்ந்துபோய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்றுவிடலாம், வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள்.

மனபலம் கொண்டு கரோனாவை விரட்டுவோம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு.

எல்லாருக்கும் எல்லாரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லிச் சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியே வருவோம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை' எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க... ’ரியா சக்ரபர்த்தியுடன் சுஷாந்த் நடிப்பதாக இருந்தது’ - இயக்குநர் ரூமி ஜாஃப்ரி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.