ETV Bharat / sitara

”மகாராஷ்டிராவின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கிறார்” - கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் கங்கனா!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் மும்பை காவல் துறையினர் குறித்தும் சர்ச்சைக் கருத்துக்களை கங்கனா தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

author img

By

Published : Sep 5, 2020, 6:24 PM IST

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மும்பை காவல் துறையினர், மகாராஷ்டிர மாநிலம், சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம், இந்தியத் திரையுலகம் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைக் கருத்துக்களை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பகிர்ந்து வரும் நிலையில், அவர் மீது மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கங்கனா குறித்து புகார் அளித்துள்ள சந்தோஷ் தேஷ்பாண்டே எனும் இந்த சமூக ஆர்வலர், மகாரஷ்டிராவின் பெருமைக்கும் மரியாதைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கங்கனா கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், கங்கனாவின் எரிச்சலூட்டும்படியான கருத்துக்கள், அம்மாநிலத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பை காவல்துறை தனது புகாரை ஏற்கத் தவறினால், தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாடி, தர்க்க ரீதியான முடிவை எட்டும்வரை தான் போராட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா பகிரும் ட்வீட்களை கடுமையாக சாடியுள்ள அவர், கங்கனா தனது பேச்சு, கருத்து சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளத்தில் நஞ்சைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பை காவல் துறையினரையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் இழிவுபடுத்தும்விதமாக கங்கனா கருத்து தெரிவித்ததாக நேற்று (செப்.04) அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று (செப்.05) அவர் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், எதிர்க்கட்சியான மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா, ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆகிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களும் கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், கங்கனாவுக்கு எதிராக மும்பை, தானே, பால்கர், புனே, அவுரங்காபாத், நாசிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

பால்கர் சாதுக்கள் கொலை சம்பவம் குறித்து, ”மும்பை, ரத்தத்திற்கு அடிமையாகி உள்ளது” என முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா தெரிவித்திருந்தார். மேலும், பாலிவுட்டில் இஸ்லாமியர்களது ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டும் கங்கனா தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை முன்வைத்து வந்துள்ளார்.

இவற்றின் விளைவாக முன்பு கங்கனாவை வெளிப்படையாக ஆதரித்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் பலரும்கூட தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். மேலும், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மராத்தி, இந்தி திரைப்பட நடிகர்களான ஊர்மிளா மாடோண்ட்கர், ரித்தேஷ் தேஷ்முக், ரேணுகா ஷாஹானே ஆகியோரும் கங்கனாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ’நான் மும்பைக்கு வருவேன், முடிஞ்சா தடுத்துப் பார்’ - சவால்விடும் கங்கனா ரனாவத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.