மும்பை: ஷாகித் கபூர் தனது திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.
திரைப்பிரபலங்கள் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் ஷாகித் தனது ரசிகர்களுடன் கேள்வி பதில் அமர்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது உங்கள் லட்சியம் என்ன என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஷாகித், நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். விதவிதமான வாய்ப்புகள் தேடி வருகிறது. கடவுள் கருணை கொண்டவர்; எனக்கு வரும் வாய்ப்புகளுக்கு உண்மை செய்வதே எனது லட்சியம்; அதற்காக நான் முழு மனதோடு பணி செய்கிறேன் என தெரிவித்தார்.
2003ஆம் ஆண்டு வெளியான ‘இஷ்க் விஷ்க்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஷாகித் கபூர். கமினே, ஜப் வி மெட், உட்டா பஞ்சாப், ஹைதர் ஆகிய படங்களினால் நற்பெயர் பெற்றார்.
தற்போது அவர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவான ‘ஜெர்ஸி’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். டிசம்பர் 31ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'புஷ்பா' ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!