தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரான சரோஜ் கான் இன்று காலமானார். 71 வயது நிரம்பிய இவர் பல இந்தி திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் வீட்டில் ஒய்வில் இருந்தார். இந்நிலையில், இவருக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், ஜூன் 17ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா பரிசோதனையில் இவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானது. மேலும், சளி தொல்லை காரணமாகவே இவருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
மாதுரி திக்ஷித்தின் 'ஏக் தோ தீன்', 'தக் தக்' போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு இவரே நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க... பழம்பெரும் காப்ரே டான்ஸர் மிஸ் ஷெஃபாலி மரணம்