ETV Bharat / sitara

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்; கவனமாக இருங்கள் - ஆமீர்கான் - கொரானா வைரஸ்

''சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குவர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் உங்களுடன் இருக்கும். பாதுகாப்பாக இருங்கள்" என நடிகர் ஆமீர்கான் கூறியுள்ளார்.

aamirkhan
aamirkhan
author img

By

Published : Feb 24, 2020, 12:37 PM IST

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் என்று நடிகர் ஆமீர்கான் சிறப்பு வீடியோ மூலம் சீனா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டன.

சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சுகாதார அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர்கான், சீனாவில் உள்ள தனது ரசிகர்களுக்கு சிறப்பு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

சீனா ரசிகர்களுக்கு சிறப்பு வீடியோ அனுப்பிய ஆமீர்

அதில், சீனாவில் உள்ள எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் அன்பான வணக்கம். கொரோனா வைரஸ் குறித்து நான் தினமும் படித்தும் அறிந்தும் வருகிறேன். அது மிகவும் கொடூரமானது. அதுமட்டுமல்லாது எனது சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டும் சீனாவின் நிலை குறித்து அறிந்து வருகிறேன். உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். சீனாவின் நிலை விரைவில் கட்டுக்குள் வரும் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் கடினமான நிலை என்பது எனக்கு தெரியும்.

இந்த நிலையை விரைவில் சீனா நிர்வாகம் கட்டுக்குள் கொண்டு வரும் என நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் அரசாங்கம் சொல்லும் அனைத்து முன்னெச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் கவனமுடன் பின்பற்றி அவர்களுக்கு உதவ வேண்டும். சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குவர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் உங்களுடன் இருக்கும். பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள் என்று கூறி முடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சீனாவில் ஆமீர்கானுக்கு பரவலாகவே நிறைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'ஃபாரஸ் கம்ப்' படத்தின் ரீமேக்கான 'லால் சிங் சத்தா' பாலிவுட்டில் உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆமீர்கான் நடித்து வருகிறார். அவருடன் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார். ஆமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்குகிறார். இந்தப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இதையும் வாசிங்க: ஆமிர்கானுக்காக விட்டுக்கொடுத்த பக்‌ஷி ராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.