டெல்லி: ரியல்மி நிறுவனத்தின் கீழ் 'டிசோ' பிராண்ட் ஸ்மார்வாட்ச் ரூ.3,499க்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான பிபிகே, இந்தியாவில் பல்வேறு பெயர்களில் பிராண்டுகளை நிலைநிறுத்தி ஆதிக்கம் செலுத்துகிறது. அந்தவகையில் பிபிகேவின் கிளை நிறுவனமான ரியல்மி, குறைந்த விலை ஸ்மார்ட் தகவல் சாதனங்களை விற்பனை செய்துவருகிறது.
தற்போது, ரியல்மி புதிய 'டிசோ' எனும் பிராண்டை உருவாக்கி தகவல் சாதனங்களை வெளியிட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த பிராண்ட் மூலம், புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும், நாய்ஸ், போட் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்வாட்ச் களமிறக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 12 நாட்கள் வரை திறனளிக்கும் பேட்டரி, நீர் புகாத கட்டமைப்பு என அம்சங்களை அள்ளி தந்திருக்கும் டிசோ, விலையிலும் நடுத்தரப் பயனர்களை திருப்திபடுத்தியிருக்கிறது.
இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், டிசோ ஸ்மார்ட்வாட்சுக்கு ரூ.500 சலுகை அறிவித்துள்ளது. குறுகிய கால சலுகையான இதனை பயனர்கள் பொருள் இருப்பு உள்ளவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள்
- 1.4 அங்குல எச்டி திரை
- 323 திரை அடர்த்தி
- 315 எம்ஏஎச் பேட்டரி / 12 நாட்கள் தாங்கும் திறன்
- புளூடூத் 5.0
- இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு கணக்கீடு
- 90 விதமான ஸ்போர்ட்ஸ் மோட்
- நிறங்கள்: வெள்ளை, கறுப்பு
- விலை: ரூ.3499
டிசோ ஸ்மார்ட்வாட்ச் தோற்றம்
![realme lifestyle brand DIZO, DIZO, DIZO smartwatch, first affordable smartwatch, latest gadget news, latest tech news, lifestyle, realme lifestyle brand, realme Link App, DIZO first affordable smartwatch, smartwatch, டிசோ ஸ்மார்ட்வாட்ச், ரியல்மி டிசோ, பிபிகே, டிசோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள், டெக் செய்திகள், டிசோ ஸ்மார்ட்வாட்ச் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12720962_realme-dizo-smartwatch-colors.png)
![realme lifestyle brand DIZO, DIZO, DIZO smartwatch, first affordable smartwatch, latest gadget news, latest tech news, lifestyle, realme lifestyle brand, realme Link App, DIZO first affordable smartwatch, smartwatch, டிசோ ஸ்மார்ட்வாட்ச், ரியல்மி டிசோ, பிபிகே, டிசோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள், டெக் செய்திகள், டிசோ ஸ்மார்ட்வாட்ச் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12720962_realme-dizo-smartwatch-water-resistant.png)
![realme lifestyle brand DIZO, DIZO, DIZO smartwatch, first affordable smartwatch, latest gadget news, latest tech news, lifestyle, realme lifestyle brand, realme Link App, DIZO first affordable smartwatch, smartwatch, டிசோ ஸ்மார்ட்வாட்ச், ரியல்மி டிசோ, பிபிகே, டிசோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சங்கள், டெக் செய்திகள், டிசோ ஸ்மார்ட்வாட்ச் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12720962_realme-dizo-smartwatch.jpg)