வாட்ஸ் அப் செயலியில் விளம்பரங்களை கொண்டு வருவதாக அந்நிறுவனம் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பேஸ்புக் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்களை வழங்குவது குறித்து முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் வாட்ஸ் அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ட்விட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.