ETV Bharat / science-and-technology

விண்வெளியில் சுரங்கம் அமைப்பதற்காக சர்வதேச அளவில் நடக்கும் போட்டி! - பொது-தனியார் கூட்டாண்மை

பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ஒரு பெரிய விண்வெளி பயணத்தை தொடங்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) விண்வெளியில் அனுப்புவதற்கு சக்திவாய்ந்த புதிய ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது.

space
space
author img

By

Published : Oct 3, 2020, 3:56 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

உலகை ஆதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான போர், தற்போது பூமியிலிருந்து நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அதன் தளத்தை கொண்டு சென்றுள்ளது. இரு நாடுகளும் தமது பொருளாதார விரிவாக்க நடவடிக்கைக்களை வேற்று கிரகத்திற்கு கொண்டு சென்றது, உலகின் பிற நாடுகளை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளின.

அமெரிக்கா அல்லது சீனா அளவிற்கு இல்லையெனினும், இந்தியாவும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் சீனாவின் விண்வெளி நோக்கங்கள் ஆகியவை இந்தியா தனது விண்வெளித் திட்டங்களை ஒருங்கிணைக்க தன்னை வேகப்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

நிலவின் வளங்களுக்கான தனது நிலையை எதிர்க்கும் எந்தவொரு நாட்டையும் எதிர்ப்பதாக அமெரிக்கா எச்சரித்தது. எந்தவொரு தேசமும் விண்வெளியில் வணிகரீதியிலான சுரங்கத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? இதற்கான பதில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஒரு பகுதியாக கையெழுத்திடப்பட்ட 1979 நிலவு ஒப்பந்தத்தில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகள் கையெழுத்திட்டன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. இந்தியா இந்த ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்ட போதிலும், அதன் நோக்கங்களை அது ஏற்கவில்லை.

சில காலமாக, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. நிலவு ஒப்பந்தம் என்பது நிலவு மற்றும் விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. இந்த வளங்கள் அமைதிக்கான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை கடைப்பிடிப்பதன் மூலம், நிலவில் இருந்து எடுக்கப்படும் வளங்கள் மொத்த மனிதகுலத்திற்கும் பயன்பட வேண்டும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் இதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. அதனால்தான் விண்வெளி வளங்களை பிரித்தெடுப்பதிலும் பயன்படுத்துவதிலும் உள்ள நிச்சயமற்ற தன்மை தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் உத்தரவு கூறியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் விண்வெளி என்பது உலகத்திற்கு பொதுவானது என்று அமெரிக்கா பார்க்கவில்லை என்பதை அழுத்தமாக கூறுகிறது. 1979 உடன்படிக்கையை தோல்வியுற்ற முயற்சி என்று ட்ரம்ப் கூறினார்.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் சில அம்சங்கள் மூலம் சீனா தடைகளை உருவாக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் சந்தேகிக்கிறது. சீனாவும் தற்போது தனது சொந்த விண்வெளி திட்டங்களுடன் முன்னேறி வருகிறது. சமீபத்தில், Long March-5B-ன் முதல் பயணத்தின் மூலம் Flexible Inflatable Cargo Re-entry Vehicle (FICRV)-ஐ சுற்றுப்பாதையில் சீனா நிலைநிறுத்தியது. முன்னதாக, விண்வெளி சேவைகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் வணிக விண்வெளி சுரங்கங்கள் மூலம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தனது பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, நிலவை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ சீனா திட்டமிட்டிருந்தது.

சீனாவின் அதிகப்படியான விண்வெளி பயணங்களை எதிர்த்து, நிலவில் தனது நிலையான இருப்பை வைத்திருப்பதற்கான நீண்டகால குறிக்கோளுடன், ஆர்ட்டெமிஸ் திட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. இந்த சூழலில், பல வல்லுநர்கள் 1979 உடன்படிக்கையிலிருந்து விலகி ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் சேருமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்துகின்றனர்.

இதற்கான சாத்தியத்தை இந்திய அரசு முழுமையாக பரிசீலிக்கப் போகிறது. மங்கள்யான், சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற பல வெற்றிகரமான விண்வெளி பயணங்களை இந்தியா செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சீனாவின் விண்வெளி ஆதிக்கத்திற்கு எதிராக வளர்வதற்கு அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவுக்கு நிச்சயம் தேவை.

பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ஒரு பெரிய விண்வெளி பயணத்தை தொடங்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) விண்வெளியில் அனுப்புவதற்கு சக்திவாய்ந்த புதிய ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. ஸ்பேஸ்எக்ஸ், அமேசான், போயிங் மற்றும் லாக்ஹீட் மார்டின் போன்ற தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகள் மற்றும் போர் வாகனங்களை உருவாக்கி வருகின்றனர். ஸ்பேஸ்எக்ஸ் ஏற்கனவே பல செயல்பாட்டு பணிகளை தொடங்கியுள்ளது.

அமெரிக்க தனியார் நிறுவனங்கள், அரசு விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும், விண்வெளி நிலையங்களை அமைக்கவும், விண்வெளி வீரர்கள் மற்றும் உபகரணங்களை பூமியிலிருந்து கொண்டு செல்லவும் தயாராகி வருகின்றனர். எப்போதும் போல், இந்த முன்னேற்றங்களை சீனா கண்டித்துள்ளது. உண்மையில், ஆர்ட்டெமிஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட அதே நாளில் சீனா FIRCVஐ விண்ணில் ஏவியது. 2050க்குள், நிலவு சிறப்பு பொருளாதார மண்டலத்தை (Moon SEZ) நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. சீன விண்வெளித் திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரராக சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CASC) உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற விண்வெளிப் பயண நாடுகளின் முன்னணியைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும் அதன் விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஜப்பானும் அமெரிக்காவும் விண்கற்கள் சுரங்கங்கள் அமைப்பதற்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.

இந்தியாவின் விண்வெளி பயணம் 1999ல் தொடங்கியது. தற்போது, விண்வெளி வீரர்களை தங்க வைப்பதற்கும் நிலவின் வளங்களை சுரங்கப்படுத்துவதற்கும் அரசாங்கம் நீண்டகால ஏற்பாடுகளை செய்து வருகிறது. சந்திரயானுக்குப் பிறகு, நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் இடத்தை இஸ்ரோ ஆராய்ந்து வருகிறது.

ககன்யான் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை 2030க்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. நிலவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 18 நாடுகளில், இந்தியாவும், பிரான்சும் மட்டுமே விண்வெளி பயணங்களை மேற்கொள்வதில் தனித்துவத்தை அடைந்துள்ளன.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பிரான்ஸ் சேரும் என எதிர்பார்க்கலாம். ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் ஒத்துழைப்பு காரணமாக இந்தியாவின் விண்வெளி நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளது.

அடுத்த வல்லரசாக உருவாகும் என கருதப்படும் இந்தியா, தனது சொந்த வாய்ப்புகளை ஆராய்ந்து ஆர்ட்டெமிஸ் விண்வெளி திட்டத்தில் அமெரிக்காவுடன் சேர வேண்டும். அதே நேரத்தில், அமெரிக்கா-சீனா விண்வெளிப் போர் குறித்தும் இந்தியா அறிந்திருக்க வேண்டும். சீனா மீதான தனது எதிர்ப்பு குறித்து அமெரிக்கா எதுவும் கூறவில்லை.

சமீபத்தில், அந்த நாடு சீனாவிடமிருந்து அச்சுறுத்தலை முன்கூட்டியே எதிர்பார்த்து ஒரு விண்வெளி இராணுவப் படையை அமைத்துள்ளது., சீனாவும் ரஷ்யாவும் விண்வெளி அடிப்படையிலான ஆயுதங்களை உருவாக்கியுள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவின் விண்வெளி ஆயுதங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கங்கள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்தியாவும் மார்ச் 2019இல் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை சோதித்து பார்த்தது. ஒட்டுமொத்தமாக, விண்வெளி என்பது இராணுவ மற்றும் பொருளாதார தளமாக மாறியுள்ளது என்பதை இந்தியா ஒப்புக் கொண்டு அது தொடர்புடைய திறன்களை மேம்படுத்த திட்டமிட வேண்டும்.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.