ஆஸ்திரேலியா: தேசிய அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் பேரெட், கடல் மாசு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், கடலின் மேல் மட்டத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை விடவும், ஆழ்கடலில் இருமடங்கு அளவு அதிக மற்றும் நுண்ணிய நெகிழிக் கழிவுகள் புதைந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் அளவு, ஒரு கோடி டன்னுக்கும் மேல் இருக்கும் என்றும் கணித்துள்ளார்.
தென் ஆஸ்திரேலிய கடலில் மேற்பரப்பிலிருந்து, 3,000 மீட்டர் கடல் ஆழத்தில் இந்த ஆய்வை ஜஸ்டின் மேற்கொண்டுள்ளார். தனது முந்தைய ஆய்வின்போது கணக்கிடப்பட்ட அளவை விட இருமடங்காக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ள ஜஸ்டின், இதனால் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.