ETV Bharat / science-and-technology

பெரிதும் பேசப்படும் OPPO Find N2 Flip ஸ்மார்ட்போனில் என்ன இருக்கிறது? - ஒப்போ பைண்ட் என்2 பிளிப் டிசைன்

இந்தியாவில் OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட OPPO Find N2 Flip ஸ்மார்ட்போனின் பிரீமியம் டிசைன் மற்றும் அசத்தலான ஸ்பெசிஃபிகேஷன் குறித்து விரிவாக காணலாம்.

OPPO Find N2 Flip
OPPO Find N2 Flip
author img

By

Published : Mar 20, 2023, 6:24 PM IST

ஹைதராபாத்: உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும், விற்பனையிலும் ஓப்போ நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் கேமரா வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில், ஓப்போ நிறுவனத்தின் புதிய Find N2 Flip ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனுக்கு இணையான ஸ்பெசிஃபிகேஷன்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மடிக்கக்கூடிய வகையிலான டிசைன் மற்றும் ஸ்பெக்ஸ் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்தியாவிலும் OPPO Find N2 Flip வெளியீட்டுக்காக வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் அறிமுகமானது.

டிசைன் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்: இந்த OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் போல்டபில் மாடலாகும். 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் HD+AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே உடன் fingerprint sensor பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 32 எம்.பி. முன்பக்க கேமரா பஞ்ச்-ஹோல் கட்அவுட்டாக பொருத்தப்பட்டுள்ளது. அதற்காக சோனி IMX709 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

OPPO Find N2 Flip
OPPO Find N2 Flip

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 உடன் ColorOS 13 இயங்குதளத்தை கொண்டிருக்கிறது. முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமராக்களுக்கு கீழே 3.26 இன்ச் HD+ OLED செகண்டரி டிஸ்ப்ளே 60Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் உள்ளது. இந்த அளவு சாம்சங் கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போனின் அளவை விட 2 மடங்கு அதிகமாகும்.

இந்த டிஸ்ப்ளே மூலம் போன் ஃபிளிப் செய்யப்பட்டிருக்கும்போது, வரக்கூடிய கால்கள், மெசெஜ்கள் மற்றும் நோட்டிபிக்கேசன்களை எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். பின்பக்க கேமராவைப் பொறுத்தவரையில், செகண்டரி டிஸ்ப்ளேவுக்கு மேலே டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா Sony IMX355 சென்சாருடனும் உள்ளது. முதன்மை கேமரா மூலம் 4K HDR வீடியோ பதிவு செய்யலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை 9 5G பேண்ட்களுடன் கூடிய 4nm MediaTek Dimensity 9000+ SoC உள்ளது. அதேபோல 8GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வசதியில் கிடைக்கிறது. மிகவும் ஸ்லிமான லுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 4300mAh மீடியம் சைஸ் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 191 கிராம் எடையில் மட்டுமே போன் உள்ளது.

ஃபிளிப் செய்வதற்கு முன்பு 166.2 x 75.2 x 7.45mm அளவையும், ஃபிளிப் செய்யப்பட்ட பின்பு 85.5 x 75.2 x 16.02mm அளவையும் கொண்டிருக்கும். 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்தியாவில் OPPO Find N2 Flip ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி Z Flip 4 ஸ்மார்ட்போன் ரூ.89,999-க்கு விற்பனையாகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் OPPO Find N2 Flip ஸ்மார்ட்போன் ஆஃபர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மூளைக்காய்ச்சல் எப்படி உண்டாகிறது.. பாக்டீரியாக்கள் எவ்வாறு மூளை செல்களை பாதிக்கின்றன.. முழு விளக்கம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.