ETV Bharat / science-and-technology

நெட்ப்ளிக்ஸிலும் வரப்போகுது விளம்பரம் - புதிய அறிவிப்பு - சுயவிவரப் பரிமாற்ற

உங்களின் நண்பரின் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தினீர்களா? நீங்கள் உங்களுக்கான தனி அக்கவுண்ட்டை பெறும் போது பழைய தகவல்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ளும் வசதியை நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது.

Etv Bharatநெட்ப்ளிக்ஸ் ஓடிடியின்  புதிய அம்சம்  - நவம்பர் முதல் இயங்கும்

author img

By

Published : Oct 18, 2022, 6:50 PM IST

சான் ப்ரான்சிஸ்கோ:பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளமானது உலகிலேயே அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. பல பயனாளர்கள் அவர்களது நெட்ப்ளிக்ஸ் கணக்குகளின் பாஸ்வேர்ட்களை பலருக்கு பகிர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வைத் தடுக்கும் விதமாக 'சுயவிவரப் பரிமாற்றம்' அம்சத்தை அதன் தளத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் உங்கள் நண்பர்களின் அக்கவுண்ட் மூலம் இதுவரை நெட்பிளிக்ஸ் பார்த்து வந்த நீங்கள், உங்கள் சொந்த அக்கவுண்ட்டுக்கு மாறும் போது, பழைய சேவ் செய்யப்பட்ட கேம்கள், படங்கள், வெப்சீரிஸ்களின் பரிந்துரைகளை இழக்காமல் அப்படியே பெறலாம்.

மேலும் இந்த அம்சமானது உலகளவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் கணக்கில் அவர்களது நண்பர்களை சேர்க்கத் தொடங்கும் போது, ​​அவர்களின் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், பார்க்கும் வரலாறு, சுயவிவர பட்டியல், கேம்கள் மற்றும் பிற விருப்பத்தேர்வுகள் (My List, saved games, viewing history, and personal settings) உள்ளிட்டவற்றை புதிய கணக்கிற்கும் மாற்ற அனுமதிக்க இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்கள் தங்கள் கணக்கில் 'சுயவிவர பரிமாற்றம்' அணுகப்பட்டவுடன், மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறுவார்கள். இதற்கிடையில் நெட்ப்ளிக்ஸ் பயனர்களுக்கு விளம்பர ஆதரவு அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட உள்ளது. இதற்கென வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் பல நாடுகளில் ''Basic With Ads' ஸ்ட்ரீமிங் திட்டத்தை வெளியிடுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில், ‘இந்தத் திட்டம் விளம்பரதாரர்களுக்கு நல்ல வாய்ப்பைப் வழங்குகிறது. நேரடியாக ஒளிபரப்பாகும் தொலைகாட்சியை அதிக அளவில் பார்க்காத இளைய தலைமுறை பார்வையாளர்கள் உட்பட பலதரப்பட்ட பார்வையாளர்களை அடையும் வாய்ப்பு விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவித்தார். விளம்பரங்கள் 15 அல்லது 30 வினாடிகள் நீளமாக இருக்கும், அவை நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கு முன்னும் பின்னும் இயக்கப்படும்.

இதையும் படிங்க:புகைப்படங்களை தொட்டு உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.