ETV Bharat / science-and-technology

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புளூ டிக்கிற்கு இனி கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Feb 20, 2023, 10:07 AM IST

மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் புளூ டிக்கை பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புளூ டிக்கிற்கும் கட்டணம்!

சான் பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை மெட்டா என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புளூ டிக்கை பெறுவதற்கு இணையப் பயனர்கள் மாதத்திற்கு 11.99 டாலர்களும் (தற்போதைய இந்திய மதிப்பில் 991.22 ரூபாய் வரை), ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் மாதத்துக்கு 14.99 டாலர்களும் (தற்போதைய இந்திய மதிப்பில் 1239.21 வரை) செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கட்டணம் செலுத்தும் முறையானது இந்த வாரம் முதல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும், அதன் பிறகு மற்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதற்குக் காரணம், சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களுக்கு அதிகளவிலான பாதுகாப்பு வழங்குவதே எனவும் மார்க் கூறியுள்ளார்.

அதேநேரம் இந்த புளூ டிக்கை அரசின் அதிகாரப்பூர்வ சான்றுகள் மூலம் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2022 நம்பவர் மாதம், மெட்டா நிறுவனம் பொருளாதார மந்தநிலை காரணமாகத் தனது ஊழியர்களிலிருந்து 13 சதவீதம் பேர், அதாவது 11,000 பேரை பணி நீக்கம் செய்தது.

ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் புதிய டிக் வகைகளை அறிமுகப்படுத்தி, அதில் ஒவ்வொரு டிக் பயனர்களுக்கும் (புளூ டிக் உள்பட) தனிப்பட்ட கட்டணத்தையும் நிர்ணயித்தது. அதேநேரம், பயனர்கள் தங்களது ட்விட்டர் கணக்கை இரட்டை முறையில் பாதுகாக்கவில்லை என்றால், ட்விட்டர் புளூ டிக் கட்டணத்தை 8 மடங்காக அபராதமாகச் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. இவ்வாறு பல பிரபல சமூக வலைத்தள நிறுவனங்களின் கட்டண உயர்வு, நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ட்விட்டர் புளூ பயனர்களுக்கு அடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.