டெல்லி: நுகர்வோர் தகவல் சாதன நிகழ்வில் ஹெச்பி எலைட் புக் 840 ஏரோ ஜி8 வெளியிடப்பட்டது.
மிக இலகுவான மடிக்கணினி என்று ஹெச்பி நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், மடிக்கணினி தினசரி பயன்படுத்தும் பயனர்களின் தேவையை இது பூர்த்தி செய்யும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
CES 2021: காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஆசஸ் மடிக்கணினிகள்!
ஹெச்பி எலைட் புக் 840 ஏரோ ஜி8 அம்சங்கள்
- 14” அங்குல திரை
- 11ஆம் தலைமுறை இண்டெல் ப்ராசஸர்
- 64 ஜிபி வரை டிடிஆர்4 ரேம்
- 2 டெரா பைட்வரை மெமரி
- வைஃபை 6
- 5ஜி அணுகல்
- 720 எச்டி கேமரா பாதுகாப்பு அம்சங்களுடன்
- முதன்முறையாக மூன்று மைக்ரோஃபோன்கள்
- மேல் மட்டத்தில் ஒலிப்பெருக்கிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்
இந்த மடிக்கணினி சந்தைக்கு எப்போது வரும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.