ஆப்பில் ஐபோன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும்போது, அதிகமான ஷேக் மற்றும் பிளர் வருவதாகப் புகார்கள் எழுந்தன. அதிலும் வேறொரு செயலியின் பயன்பாட்டிற்காக, மொபைலில் உள்ள கேமராவைப் பயன்படுத்தும்போது இந்தப் பிரச்னைகள் அதிகமாக எழுந்துள்ளன.
குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும்போது ஆப்பிள் பயனர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 14 ப்ரோ (IPhone 14 Pro) மாடலில் இவை அனைத்தையும் சரிசெய்து நேர்த்தியான கேமராவை கொடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
முக்கியமாக 48 MP சென்சாருடன் கூடிய கேமராவை வழங்கவுள்ளது. இதனை ஆப்பிளின் இரண்டாம் தலைமுறை OIS (Optical Image Stabilization)தொழில்நுட்ப சென்சாருடன் வடிவமைத்து வருகிறது. எனவே இதன் மூலம் மற்ற செயலிகளின் பயன்பாட்டிற்காக ஆப்பிள் கேமராவைப் பயன்படுத்தும்போது முந்தைய இடர்களைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: சாம்சங் கேலக்ஸி எஸ்23 செல்போனின் சிறப்பம்சம் என்ன?