ETV Bharat / science-and-technology

மூளைக்காய்ச்சல் எப்படி உண்டாகிறது.. பாக்டீரியாக்கள் எவ்வாறு மூளை செல்களை பாதிக்கின்றன.. முழு விளக்கம்..

author img

By

Published : Mar 3, 2023, 7:18 PM IST

மூளைக்காய்ச்சல் எனப்படும் பெரும் நோய்த்தொற்று எப்படி உண்டாகிறது என்பது குறித்தும், நோய் எதிர்ப்புச் செல்களை கடந்து பாக்டீரியாக்கள் எப்படி மூளை திரவத்தை அடைகின்றன என்பது குறித்தும் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

How microbes hijack brain cells to cause meningitis

பொதுவாக மூளைக்காய்ச்சல் என்பது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களால் ஏற்படும் கொடிய நோயாகும். இதனால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், மரணம் ஏற்படுகிறது. அதாவது பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ மூளையின் நோய் எதிர்ப்பு செல்களைக் கடந்து, மூளையில் சுற்றியுள்ள திரவத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் மூளையின் செயல்பாடுகள் குறைந்து, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதையே மூளைக்காய்ச்சல் என்கிறோம். இதை ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டும். அதாவது வயிற்று எரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை, அதீத சோம்பல், நீண்ட நாள் காய்ச்சல் உள்ளிட்டவை மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். இவை தீவிரமாகும்போது அதற்காக சிகிச்சைகளை உடனடியாக செய்துவிட வேண்டும்.

இந்த நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மூளையின் பாதுகாப்பு அடுக்குகளில் உள்ள நரம்பு செல்களைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள், படிப்படியாக மூளை திரவத்தை அடைகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் குழந்தைப்பருவ உடல் பருமன் 9.1% அதிகரிக்கும்.. பெற்றோர்கள் கவனம்..

நரம்பு செல்களை பாதிப்பு ஏற்படுவதால், நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் பாக்டீரியாக்கள் எளிதாக மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மூளையின் பாதுகாப்பு அடுக்குகளில் உள்ள நியூரோ இம்யூன் செல்களை முதலில் பாக்டீரியாக்கள் பாதிக்கின்றன.

இது தொற்று நோயைப்போல உயிர்வாழ்வு செல்களைப்போல, கடத்தப்பட்டு நோய்க்கு வழிவகுக்கிறது. இருப்பினும், மனித நரம்பு மண்டத்தில் இருந்து வெளியாகும் உயிரணுக்கள் பாக்டீரியாக்கள் தாக்கத்தை பெரும்பாலும் தடுத்துவிடும். நீண்டநாள் பாதிப்பு காரணமாக வேண்டுமானால், மூளைக்காய்ச்சல் ஏற்படலாம் என்று நோயெதிர்ப்பு மண்டல ஆராய்ச்சி இணை பேராசிரியர் ஐசக் சியு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சொல்லப்போனால், நரம்பு மண்டலத்தின் பல்வேறு அடுக்குகளில் முதல் சில அடுக்குகளையே பாக்டீரியாக்கள் தடுக்கின்றன. இவற்றை ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறிந்து, நோய்க்கிருமிகள் மூளைக்குள் நுழைவதற்கு முன் தடுக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.

செல்களில் இருந்து திசுக்கள் முழுவதும் பரவுவதைத் தடுக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. காது கேளாமை, பார்வை இழப்பு, வலிப்பு, நாள்பட்ட தலைவலி மற்றும் பிற நரம்பியல் பிரச்னைகள் உள்ளவர்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் புதிய சிகிச்சைகளின் தொடக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்பது பதிவாகியுள்ளது. மீதம் உள்ளவர்கள் காது கேளாமை, மூளைப் பாதிப்பு, மன நலம் பாதிப்பு, பக்க வாதம் மற்றும் ஊனம் உள்ளிட்டவைகளுக்கு உள்ளாகின்றனர். இந்த நோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களிடையே ஏற்படுகிறது. இதற்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: கோடைக்காலத்தில் வியர்வை துர்நாற்றத்தை கடுப்படுத்த 10 டிப்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.