சியோமி நிறுவனத்தால் ரெட்மி கே 20 என்னும் மொபைல் ஃபோன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அதன் செயல் அதிகாரி மனுகுமார் ஜெயின் கூறுகையில், ”சிக்னேச்சர் மொபைல் ஃபோனின் விலை ரூ 4.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் 100 கிராம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ”கே” என்னும் எழுத்து வைரத்தால் பதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுவரை இந்த மாடலில் 20 ஃபோன்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த ஃபோன்கள் இந்த வருட இறுதிக்குள் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.