ஜெர்மன் நாட்டின் பிரபல மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான சென்ஹைசர், ஹெட்ஃபோன்கள், மைக்ரோஃபோன்கள், இயர்ஃபோன்கள் தயாரிப்பில் அசத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான, அந்நிறுவனத்தின் சிஎக்ஸ் 400 பி.டி. ட்ரூ வயர்லெஸ் இயர்ஃபோன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதையடுத்து தற்போது அந்நிறுவனம், 'ஹெச்டி 560 எஸ்' எனும் புதிய ஹெட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ஹெட்ஃபோன்கள் 6 ஹெர்ட்ஸ் முதல் 38 கிலோஹெர்ட்ஸ் அதிர்வெண்ணை கொண்டது. உயர் ரக சார்ஜிங் அடாப்டர் உடன், இதன் விலை ரூ.18,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் எழுச்சிப் பாதையில் சாம்சங்