ETV Bharat / science-and-technology

முகக்கவசம் அணியுங்கள், இடைவெளிவிட்டு நில்லுங்கள் - அசத்தும் ஜப்பான் ரோபோட் - ரோபோவி

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால், அதை அணியச் சொல்வது, இடைவெளி விட்டு நிற்கச் சொல்வது என ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் ‘ரோபோவி’ என்னும் ரோபோட் அசத்திவருகிறது.

use of robots during covid 19
use of robots during covid 19
author img

By

Published : Dec 5, 2020, 6:43 AM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ஒசாகா (ஜப்பான்): குழந்தைபோல அதன் தோற்றம் இருந்தாலும், ‘ரோபோவி’ என்னும் ரோபோட், கோவிட் முன்னெச்சரிக்கை தொடர்பாக கூறும் தகவல்கள் அசாத்தியமானவை.

கண்களில் உயர் ரக படக்கருவியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோட், முகக்கவசம் அணியாதவர்களைக் கண்டறிந்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. கூடவே, தகுந்த இடைவெளி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பொருள்கள் வாங்க நின்றால், அருகில் சென்று இடைவெளிவிட்டு நிற்கும்படி அறிவுறுத்துகிறது.

மாஸ்க் அணியுங்கள்; இடைவெளி விட்டு நில்லுங்கள் - அசத்தும் ஜப்பான் ரோபோட்

இப்படியான அறிவுரைகள் மட்டுமின்றி, சரியாக முகக்கவசம் அணிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களை அருகில் சென்று பாராட்டி அசத்துகிறது ‘ரோபோவி’. கோவிட் காலத்தில் ரோபோவி தொழில்நுட்ப சாதனங்கள் தவிர்க்கமுடியாதவை என்று உணர்த்துகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.