வயர்லெஸ் இயர்போன்கள் என்பது தற்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களின் விலை அதிகம் என்பதால் பலரும் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன்களை எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு ஏற்ற வகையில் சோனி, ரியல்மி, போட் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன்களை வெளியிட்டுவருகின்றன. இருப்பினும், தற்போது சந்தையில் நான்காயிரம் ரூபாய்க்கு மேல்தான் ஓரளவு நல்ல வயர்லெஸ் இயர்போன்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்த விலையில் பாதிக்கும் குறைவாக சியோமி நிறுவனம் வயர்லெஸ் இயர்போன்களை வெளியிட்டுள்ளது.
ரெட்மி இயர்பட்ஸ் எஸ் வசதிகள்
- IPX4 ரேட்டிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 12 மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம்
- கேம்களை விளையாடச் சிறப்பு வசதிரெட்மி இயர்பட்ஸ் எஸ்
ரூ.1799க்கு விற்கப்படும் இந்த இயர்போன் அமேசான், Mi.com ஆகிய தளங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
விரைவில் அனைத்து கடைகளில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று சியோமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அட்டகாசமாக வெளியான ரியல்மியின் நான்கு தயாரிப்புகள்!