சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல் மீ, இன்று தனது புதிய படைப்பான ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 65W சூப்பர் டார்ட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம், இன்-டிஸ்ப்ளே கைரேகை உணர்வி (சென்சார்), இரட்டை செல்ஃபி கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சம்கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 5 ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்போனாகும்.
-
#realmeX50Pro is a gigantic leap for us. #real5G, SD 865, 65W SuperDart charging & other amazing features.
— Madhav 5G (@MadhavSheth1) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch the launch live at 2:30 PM, tomorrow.
See you guys!https://t.co/8pkvjxFUNL pic.twitter.com/6et6z8h1Lz
">#realmeX50Pro is a gigantic leap for us. #real5G, SD 865, 65W SuperDart charging & other amazing features.
— Madhav 5G (@MadhavSheth1) February 23, 2020
Watch the launch live at 2:30 PM, tomorrow.
See you guys!https://t.co/8pkvjxFUNL pic.twitter.com/6et6z8h1Lz#realmeX50Pro is a gigantic leap for us. #real5G, SD 865, 65W SuperDart charging & other amazing features.
— Madhav 5G (@MadhavSheth1) February 23, 2020
Watch the launch live at 2:30 PM, tomorrow.
See you guys!https://t.co/8pkvjxFUNL pic.twitter.com/6et6z8h1Lz
ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜியின் அம்சங்கள்
- 6.57 அங்குல முழு ஹெச்.டி. + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவில், 2400 x 1080 பிக்சல்கள்.
- 90.4 சதவிகித தொடுதிரை, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரஸ் ரேட்.
- கூடுதல் சேமிப்பகம் கொண்டது, குறைந்தபட்சம் 12 ஜிபி ராம், 256 ஜிபி ரோம் சேமிப்பகம்.
- 64 எம்பி வசதியுடன் இரண்டு குவாட் டூயல் செல்ஃபி கேமரா.
- 64 எம்பி மெயின் பேக் கேமராவுடன் 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் வசதி, 119 டிகிரி அல்ட்ரா-வைட் பயன், சூப்பர் நைட்ஸ்கேப் 3.0.
ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜியின் விலை
- (6 ஜிபி ராம் + 128 ஜிபி நினைவகம்) விலை 37 ஆயிரத்து 999 ரூபாய்.
- (8 ஜிபி ராம் + 128 ஜிபி நினைவகம்) விலை 39 ஆயிரத்து 999 ரூபாய்.
- (12 ஜிபி ராம் + 256 ஜிபி நினைவகம்) விலை 44 ஆயிரத்து 999 ரூபாய்.
இந்த மூன்று மாடல்களும் மாலை 6 மணியிலிருந்து பிளிப்கார்ட் (Flipkart) ரியல்மே.காம் (Realme.com) இணையப் பக்கத்தில் பெறலாம்.
இதையும் படிங்க: நிவாரணம் வழங்க முடியாத நிலையில் அரசு - கலக்கத்தில் டெலிகாம் ஆபரேட்டர்கள்!