ஹுவாமி நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் துறையில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் ஹுவாமி நிறுவனம் அமேசான் இந்தியாவுடன் சேர்ந்து தனது அடுத்த கண்டுபிடிப்பாக அமேஸ்பிட் பிப் லைட் எனும் ஸ்மார்ட் வாட்ச்சினை, அதிநவீன சிறப்பு அம்சங்களோடு வெளியிடுகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள் ஒரு முறை முழு சார்ஜ் செய்தாலே 45 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, பி.பி.ஜி(PPG) சென்சார் உள்ளதால் இதய துடிப்பின் அளவையும் கண்டறியும் முடியும். மேலும் ஸ்மார்ட் வாட்ச் ஸ்போர்ட் டிராக்கிங்கையும் கொண்டுள்ளதால் சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் உள்ளிட்ட நான்கு கார்டியோ நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது.
இந்த வாட்சானது உடற்பயிற்சி செய்வதைக் கண்காணிப்பது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு, ஐஓஸ் கைப்பேசி சாதனத்துடன் இணைத்து விட்டால் செல்போன் அழைப்புகள், குறுந்தகவல் அறிவிப்புகளை வாட்சியின் டிஸ்ப்ளேவில் பார்த்துக் கொள்ளலாம். மேலும் நீர் புகா வசதி உள்ளதால் நீச்சல் செய்வார்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஹுவாமி அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட் வாட்ச் வருகிற ஜூலை 15 ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விலையாக ரூ. 3,999 என நிர்ணயித்துள்ளது.