ETV Bharat / science-and-technology

அமேசானின் அலெக்ஸாவில் வரும் அமிதாப் பச்சன் குரல்! - அமிதாப் பச்சன்

டெல்லி: அமேசானின் ஸ்மார்ட் ஸ்பீக்கரான அலெக்ஸாவில் விரைவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குரல் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Amitabh Bachchan gives voice for Alexa
Amitabh Bachchan gives voice for Alexa
author img

By

Published : Sep 15, 2020, 10:21 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானுக்கு இந்தியாவில் பிளிப்கார்ட் கடும் போட்டியை அளித்துவருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க அமேசான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், அமேசான் தனது ஸ்மார்ட் ஸ்பீக்கராக அலெக்ஸாவில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குரல் பயன்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, அமேசான் தளத்தில் இருக்கும் Amitabh Bachchan voice experience என்பதை வாங்கினால், இவ்வசதியை அமேசான் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், "திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தொடர்ந்து இப்போது அமேசான், அலெக்ஸாவுடன் இணைந்து இந்த குரல் அனுபவத்தை உருவாக்குவதில் எனக்கு மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமிதாப் பச்சனின் இந்தக் குரல் வசதி அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாவை ஸ்மார்ட் ஸ்பீக்கரைத் தவிர ஃபையர் ஸ்டிக், ஃபையர் டிவி, உள்ளிட்டவற்றில் இருந்தும் கேட்க முடியும்.

இதையும் படிங்க: இந்திய நிறுவனங்களில் ரூ.7,300 கோடியை முதலீடு செய்துள்ள சீனா!

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.