அமேசான் நிறுவனத்திற்கு அள்ளித்தரும் சேவைப் பிரிவான Amazon Web Services (AWS) எனப்படுவது, க்ளவுட் ஸ்டோரேஜைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் தரவுகளை சேமிக்கவும், பயனாளர்களுக்கு அதனை எடுத்துச் செல்லவும் உதவும் நிறுவனம் ஆகும்.
இந்நிலையில், 20,761 கோடி மதிப்பிலான முதலீட்டுடன் தனது புதிய மையத்தை தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் AWS நிறுவனம் தொடங்க உள்ளதாக அம்மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர் தாரகா ராமா ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இந்நிறுவனத்தின் தரவு மையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மையம் வருகிற 2022ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.