பிரமாண்டமான இந்த பிரபஞ்சத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட யாரும் அறியாத மிகப்பெரிய ரகசியம் என்னவென்று பார்த்தால் அது கருந்துளை என்று தான் சொல்ல வேண்டும். இதில் அப்படி என்ன மிகப்பெரிய ரகசியம் உள்ளது என்று கேட்டால், இது இயற்பியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. தற்போது இருக்ககூடிய எந்த இயற்பியல் விதிகளும் இந்த கருந்துளைக்கு பொருந்தாது.
பிரமாண்டமான கருந்துளையின் முதல் புகைப்படம்...!: நாம் வசிக்கும் பூமி சூரிய குடும்பத்தைச் சார்ந்தது. சூரியனைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததுதான் பால்வெளி அண்டம். நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் பிரம்மாண்டமான கருந்துளை இருப்பதாக அறிவியல் கூறும் நிலையில், இது முதல் முறையாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
”ஹாஜிட்டேரியஸ் A” என்று அழைக்கப்படும். இந்த பொருள் நமது சூரியனை விட நான்கு மில்லியன் மடங்கு பெரியது என்ற தகவல் திகைப்பூட்டுகிறது. இதன் அளவைப் பொறுத்தவரை, புதன் சூரியனை சுற்றி வரும் தூரத்திற்கு இணையாக இந்த கருந்துளையின் அளவை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கருந்துளையின் இயல்பே தன்னை நோக்கி வரும் பொருட்களை தன்னுள் ஈர்த்துக் கொள்வது தான். ஆனால் இந்த கருந்துளை வெகு தொலைவில், சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதனால் நமது பூமிக்கு எந்த ஆபத்தும் வர வாய்ப்பில்லை.
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் மிக பெரிய கருந்துளையின் முதல் புகைப்படம் ஒன்றை வானியல் வல்லுனர்கள் வெளியிட்டு உள்ளனர். இதனை ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்றதொரு கருந்துளையை படம்பிடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்தது.

இந்த கருந்துளை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள 8 ரேடியோ தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உள்ளனர் என மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் கூறியுள்ளது. ஓர் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
கருந்துளை என்றால் என்ன..?
கருந்துளை(BLACK HOLE) என்பது மிகப்பெரிய அண்ட வெளியில் மற்றும் விண்வெளியில் காணப்படும் சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத வெற்றிடமாகும். இந்த கருந்துளை அதிக ஈர்ப்பு விசை கொண்டது. எந்த அளவுக்கு என்றால், இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்திவாய்ந்தது. இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
இந்த கருந்துளையானது அதனுள் சென்ற சிறிய ஒளியை கூட வெளிய வர விடாது, அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தது. நமது பால்வெளியின் அருகில் உள்ள ஒரு கருந்துளை நமது சூரியனை விட 40 லட்ச மடங்கு பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கருந்துளை ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலும் காணப்படும். இந்த கருந்துளை பற்றிய அனைத்து கருத்துகளும் அதனை சுற்றியுள்ள பொருள்களை வைத்தே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கருந்துளைக்குள் எவரும் சென்றதில்லை.
BLACK HOLE தியரி உருவான விதம்: 1916-ஆம் ஆண்டு, கருந்துளை என்று ஒன்று இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அப்போது `கருந்துளை' என்ற பெயர் பழக்கத்தில் இல்லை. 1967-ஆம் ஆண்டுதான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்ற பெயரை உருவாக்குகிறார். அதுவரை இருக்கிறதா? இல்லையா? என்ற கணிப்புகளிலேயே இருந்த கருந்துளை முதன்முதலாக 1971-ஆம் ஆண்டு கண்டறியப்படுகிறது. அன்று தொடங்கி இன்று வரை நம்மால் நேரடியாக அணுகமுடியாத இந்த விசித்திரத்தைப் பற்றி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளும், புனைவுகளும் உருவாக்கப்பட்ட வண்ணம்தான் உள்ளன.
நாம் அண்டத்தை பற்றி 1 சதவீதம் மட்டுமே அறிந்திருக்கின்றோம். மீதமுள்ளவற்றை நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. இதற்கு சிறந்த எடுத்துகாட்டு DARK ENERGY நமது அண்டத்தில் 10 கோடி லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் உள்ளன. அதுபோல் நிறைய கருந்துளைகளும் உள்ளன.
இந்த கருந்துளை மற்ற கிரகங்கள் போன்று சுழலும் தன்மை கொண்டது. இது ஒளியின் வேகத்தில் 30% அளவிற்கு வேகமாக சுழல்கிறது. மிகவும் பிரம்மாண்டமான ஒளிவீசும் நட்சத்திரம் தனது ஒளியை இழந்து பிறகு அப்படியே அதே நிறையில் சுருங்கும்,இப்படி மிகச்சிறியதாக சுருங்கி அதிக நிறையுள்ள ஒரு கருந்துளையாக மாறும். இந்த கருந்துளை எந்த ஒரு இயற்பியல் விதிகளுக்கும் உட்படாது.
கருந்துளையின் பண்புகள்: இந்த கருந்துளைகளை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்த கருந்துளை சுற்றி சில நேரங்களில் ஒளி, தூசிகள் காணப்படும் இவை என்னவென்றால் உருக்குலைக்கப்பட்ட கிரகங்களின் பாகங்கள் இதனை சுற்றி வருகின்றன. அதாவது கருந்துளைகளால் முழுங்கபட்ட கிரகங்களின் பாகங்கள் ஆகும்.
கருந்துளை நடுவிலும் என்ன இருக்கின்றது என்பதும் தெரியவில்லை. ஏனெனில் இது குறித்த ஆய்வு அவ்வளவு எளிதல்ல. இந்த கருந்துளையின் மையத்தில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. நாம் இந்த கருந்துளையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் ஒளியை விட அதிக வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஐன்ஸ்டீன் கோட்பாடு படி எந்த ஒரு பொருளும் ஒளியை விட அதிக வேகத்தில் செல்ல முடியாது. இந்த காரணத்தினாலேயே கருந்துளை பற்றி படிக்க கடினமாக உள்ளது.
இந்த கருந்துளை பற்றி அறிந்துகொள்ள அதனை சுற்றி வரும் பொருள்களை வைத்தே கண்டறிகின்றனர். இந்த கருந்துளைஅனைத்தையும் தன்னுள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லமுடியாது ஏனென்றால் இந்த கருந்துளைகள் தன்னை நோக்கி வரக்கூடிய ஒளி மற்றும் கிரகங்களை ஈர்த்துகொள்ளும். ஆனால் இதுவே தானாக சென்று எந்த கிரகத்தையும் தன்னுள் ஈர்க்காது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கருந்துளை உள்ளே சென்றால் என்னவாகும்?:ஒருவர் கருந்துளை உள்ளே சென்றுவிட்டார் என்றால் அவர் உடனே இறந்துவிடுவர். அந்த கருந்துளை அருகே செல்ல செல்ல நேரமானது குறைந்து கொண்டே செல்லுமாம். தற்சமயம் அவர் உயிரோடு இருந்தாலும் அவரால் காலபயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவை ஒரு கற்பனையாக கூறப்படுகிறது. நிஜ வாழ்வில் கருந்துளை உள்ளே சென்றால் நாம் நூடுல்ஸ் போல ஆகிவிடுவோமாம்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் விழா.. அமைச்சர்கள் இத்தாலி பயணம்