ETV Bharat / science-and-technology

சைபர் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறதா? - பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு

பெங்களூரு: சைபர் பாதுகாப்பில் உள்ள பிரச்னையை தீர்க்க கொள்கை, திறமை, வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தற்போதைய தேவையாக கருதப்படுகிறது.

சைபர் பாதுகாப்பு
சைபர் பாதுகாப்பு
author img

By

Published : Nov 21, 2020, 1:37 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

இதுநாள்வரை, சைபர்பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்ததே இல்லை. இந்தப் பிரச்னையை தீர்க்க கொள்கை, திறமை, வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே தற்போதைய தேவை. இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சைபர் பாதுகாப்பு குழு தலைவர் ராஜீவ் கோபாலகிருஷ்ணா, இந்திய அறிவியல் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் ஆட்டோமேசன் துறையின் துணை பேராசிரியர் வினோத் கணபதி, ஐஐடி கான்பூரில் கணினி பொறியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிவரும் சந்தீப் சுக்லா, McAfee நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பவியலாளர் தத்தத்ரேயா குல்கர்னி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெங்களூரு உச்ச மாநாடு
பெங்களூரு உச்சி மாநாடு

சைபர் பாதுகாப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிக அளவு முதலீடு செய்யப்பட்டுவருகிறது. ஆனால், இதில் வெகுதொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதிலும் சைபர் பாதுகாப்பில் தனியுரிமைக்கான தொழில்நுட்பங்களை சந்தைக்கு எடுத்துவருவதிலும் பல சவால்கள் உள்ளன. சைபர் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதலை வெற்றி அடைய செய்ய அனைவரின் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

கீழிருந்து மேல் வரை அனைத்து மட்டங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சுக்லா தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை கட்டமைப்பு, நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என அவர் கூறுகிறார். இத்துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலமாகவே இந்தியா முன்னிலை வகிக்க முடியும் என பேராசிரியர் கணபதி தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.